ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
பேட்மிண்டனில் ரவுண்ட் ஆப் 16ல் இந்தியா- மங்கோலியா இடையேயான போட்டி தொடங்கியது.
டென்னிஸ் கலப்பு இரட்டையர் ரவுண்ட் ஆப் 3 போட்டி 8ல் இந்தியா - ஜப்பான் மோதின. இப்போட்டியில் ஜப்பானை 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் நாளை நடைபெற உள்ள காலிறுதி சுற்றுக்கு இந்தியா முன்னேறியுள்ளது. நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் இந்தியா கஜகஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.
டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு ரவுண்ட் 3 போட்டி 1ல் இந்தியா - பிலிப்பைன்ஸ் மோதின. இப்போட்டியில் இந்தியாவை 6-4, 6-4,10-8 என்ற செட்களில் வீழ்த்தி பிலிப்பைன்ஸ் வெற்றிபெற்றது.
குதிரையேற்றம் டிரஸ்ஏஜ் பிரிவு இன்டர்மிடியேட் சுற்றில் இன்று நடந்த ஆட்டத்தில் இந்திய வீரர்களான ஹர்டே விபுல் ஷிடா முதல் இடத்தையும், அனுஷ் 2ம் இடத்தையும், திவ்யகீர்தி 11ம் இடத்தையும், சுதீப்தி கடைசி இடமான 32ம் இடத்தையும் பிடித்தனர்.
கூடைப்பந்து 3x3 ஆண்கள் ரவுண்ட் ராபின் பிரிவு ஏ போட்டி 33ல் இந்தியா - சீனா மோதின. இப்போட்டியில் இந்தியாவை 22-8 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி சீனா வெற்றிபெற்றது.
வுஷூ பெண்கள் 60 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதி சுற்றில் இந்தியா - வியட்நாம் மோதின. இப்போட்டியில் வியட்நாம் வீராங்கனையை 2-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை ரோஷிபினா தேவி அபாரமாக வெற்றிபெற்றார். இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் இந்திய வீராங்கனை தேவி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார்.
இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் இந்திய வீராங்கனை தேவி தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய விளையாட்டில் வரும் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கும் செஸ் போட்டியில் ஆண்கள் அணியில் பிரக்ஞானந்தா இடம்பெறுகிறார்.
சதுரங்கத்தில், தனிநபர் ரேபிட் செஸ் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா இம்முறை பதக்கங்களை வென்றிடவில்லை.
இதில், சதுரங்க போட்டியில் ஆண்கள் பிரிவில் விளையாடிய விதித் குஜராத்தி 5வது இடமும், அர்ஜுன் எரிகைசி 6வது இடம் பிடித்தனர்.
இதேபோல், சதுரங்க போட்டியில் பெண்கள் பிரிவில் ஹரிகா துரோணவல்லி 4வது இடமும், கோனேரி ஹம்பி 7வது இடமும் பிடித்தனர்.
குத்துச்சண்டை பெண்கள் 45-50 கிலோ எடை பிரிவில் பிரிலிம்ஸ் ரவுண்ட் ஆப் 16 சுற்றில் இந்தியா - தென்கொரியா அணிகள் மோதின. இப்போட்டியில் தென்கொரிய வீராங்கனையை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை ஜரீன் நிகாத் வெற்றிபெற்றார். இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு ரவுண்ட் ஆப் 32 சுற்று 42ம் போட்டியில் இந்தியா - சீனா மோதின. இப்போட்டியில் சீனாவை 3-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஹர்மீத் ராஜுல், ஸ்ரீஜா வென்றனர்.