ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு ரவுண்ட் ஆப் 32 சுற்று 37வது போட்டியில் இந்தியா - தாய்லாந்து மோதின. இந்த போட்டியில் 3-1 என்ற செட் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி இந்திய ஜோடி சத்யன் ஞானசேகரன், மனிகா பத்ரா வெற்றிபெற்றனர்.
ஸ்குவாஷ் பெண்கள் குழு பிரிவு பி 34வது போட்டியில் இந்தியா - சீனா மோதின. இப்போட்டியில் சீனாவை 3-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இந்திய பெண்கள் அணி அபாரமாக வென்றது.
டேபிள் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவு ரவுண்ட் ஆப் 64 சுற்றின் 6ம் போட்டியில் இந்தியா - தாய்லாந்து மோதின. இப்போட்டியில் தாய்லாந்தை 3-2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்தியா அபாரமாக வென்றது.
டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றின் 3ம் போட்டியில் இந்திய வீராங்கனை அங்கிதாவை 3-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஜப்பான் வீராங்கனை ஹருகா வெற்றிபெற்றார்.
இஸ்போர்ட்ஸ் லீக் ஆப் லெஜண்ட்ஸ் காலிறுதி சுற்று 4ல் இந்தியா - வியட்நாம் அணிகள் மோதின. இப்போட்டியில் இந்தியாவை 2-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வியட்நாம் அபாரமாக வெற்றிபெற்றது.
குத்துச்சண்டை ஆண்கள் 80- 92 கிலோ பிரிவு ரவுண்ட் ஆப் 16 சுற்றில் உஸ்பெகிஸ்தான் வீரரிடம் 5-0 என்ற புள்ளி கணக்கில் இந்திய வீரர் சஞ்ஜித் தோல்வியடைந்தார்.
குத்துச்சண்டை ஆண்கள் 57- 63.5 கிலோ பிரிவு ரவுண்ட் ஆப் 16 சுற்றில் கஜகஸ்தான் வீரரிடம் 5-0 என்ற புள்ளி கணக்கில் இந்திய வீரர் சிவா தபா தோல்வியடைந்தார்.
டென்னிஸ்: ஆடவர் ஒற்றையர் பிரிவில் சுமித் நாகல் 7-6, 1-6, 2-6 என்ற செட் கணக்கில் முதல் நிலை வீரரான சீனாவின் ஜாங் ஜிசனிடம் போராடி தோல்வியடைந்தார்.
துப்பாக்கி சுடுதல் ஆண்கள் ஸ்கீட் 50 பிரிவில் ஆனந்த் ஜீத்சிங் நருகா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
குத்துச்சண்டை: ஷிவா தாபா தொடக்க சுற்றிலேயே வெளியேறினார்.