விளையாட்டு
LIVE

ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்

Published On 2023-09-23 06:42 IST   |   Update On 2023-10-07 16:38:00 IST
2023-09-28 03:50 GMT

சைக்கிளிங் பெண்களுக்கான ஸ்பிரிண்ட் 1/16 ஹீட் 2வது போட்டியில் ஜப்பான் வெற்றிப்பெற்றது.

2023-09-28 03:43 GMT

சைக்கிளிங் பெண்களுக்கான ஸ்பிரிண்ட் தகுதிச்சுற்று போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனைகள் த்ரியஷா பவுல் மற்றும் மயூரி தன்ராஜ் லூட் ஆகியோர் தோல்வியடைந்தனர்.

2023-09-28 03:37 GMT

சைக்கிளிங் ஆண்கள் ஸ்பிரிண்ட் காலிறுதி சுற்று ரேஸ் 2வது போட்டி நடைபெற்றது. இதில், ஹீட் 2ல் ரேஸ் 1 மற்றும் ரேஸ் 2 என இரண்டிலும் இந்தியா தோல்வியை சந்தித்தது.

2023-09-28 03:29 GMT

சைக்கிளிங் ஆண்கள் ஸ்பிரிண்ட் காலிறுதி சுற்று ரேஸ் ஒன்று போட்டியில், ஹீட் 2ல் ரேஸ் 1 மற்றும் ரேஸ் 2 என இரண்டிலும் ஜப்பானிடம் இந்தியா தோல்வியடைந்தது.

2023-09-28 03:26 GMT

சைக்கிளிங் ஆம்னியம் ஸ்கிராச் ரேஸ் 1/4 என்ற சுற்றில் இந்தியா 9வது இடம் பெற்று தோல்வியை சந்தித்தது.

2023-09-28 03:10 GMT

நீச்சலில் ஆண்களுக்கான 50 மீட்டர் பட்டர்ஃபிளை ஹீட் சுற்றில் இந்தியா 24.67 வினாடிக்கு தோல்வியடைந்தது.

2023-09-28 02:51 GMT

நீச்சலில் பெண்கள் 50 மீட்டர் ப்ரீஸ்டைல் ஹீட் 2 போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை ஷிவாங்கி சர்மா, 26.92 வினாடியில் ஹீட் சுற்றில் தோல்வியடைந்து இறுதிச்சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.

2023-09-28 02:42 GMT

துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆண்கள் அணி ஒற்றையர் பிரிவு தகுதிச்சுற்றுக்கான போட்டியில் வென்ற அர்ஜூன் சீமா, சராப்ஜோட் சிங் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

2023-09-28 02:38 GMT

டேபிள் டென்னிஸ் ஆவுண்ட் ஆப் 16 இரட்டையர் கலப்பு பிரிவு போட்டியில் இந்தியா- தாய்லாந்து மோதின. இதில், 3-0 (11-4, 11-6, 12-10) என்ற செட் கணக்கில் தாய்லாந்து வெற்றிப்பெற்றது.

2023-09-28 02:29 GMT

துப்பாக்கி சூடு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆண்கள் அணி போட்டியில் 6 ரவுண்டுகள் சுற்று முடிவில் இந்தியா வீரர்களான அர்ஜூன் சீமா, சராப்ஜோட் சிங் மற்றும் ஷிவ நர்வா ஆகியோர் தங்கம் வென்றனர்.

Tags:    

Similar News