ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
துப்பாக்கி சூடு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆண்கள் அணி போட்டியில் 6 ரவுண்டுகள் சுற்று முடிவில் 1734-50x புள்ளிகள் பெற்று இந்தியா தங்கம் வென்றது.
சீனா 1733-62X புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கம் வென்றது.
வியட்நாம் 1730-59X புள்ளிகள் பெற்று பிரான்ஸ் பதக்கம் வென்றது.
பேட்மிண்டனில் ரவுண்ட் ஆப் 16 போட்டி 3ல், 2-0 (21-0, 21-2) என்ற கேம் கணக்கில் மங்கோலியாவை வீழ்த்தி இந்தியா வென்றுள்ளது.
பேட்மிண்டனில் ரவுண்ட் ஆப் 16 போட்டி 2ல், 2-0 (21-2, 21-3) என்ற கேம் கணக்கில் மங்கோலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றிப்பெற்றுள்ளது.
வூஷூ பெண்கள் 60 கிலோ எடை பிரிவு இறுதிப்போட்டியில், 2-0 என்ற புள்ளி கணக்கில் இந்தியாவை வீழ்த்தி சீனா தங்கம் வென்றது. இந்திய வீராங்கனை ரோஷிபினா தேவி வெள்ளி பதக்கம் வென்றார்.
வூஷூ இறுதிப்போட்டி தொடங்கியது. இந்திய வீராங்கனை ரோஷிபினா தேவியும் சீன வீராங்கனை சியாவெய் மோதி வருகின்றனர்.
பேட்மிண்டன் போட்டியில், ரவுண்ட் ஆப் 16 போட்டி 2ல் இந்தியா- மங்கோலியா மோதியுள்ளன. இந்திய வீராங்கனை அஷ்மிதாவுடன் மங்கோலியா வீராங்கனை தர்கான்பத்தார் கெர்லென் விளையாடி வருகிறார்.
பேட்மிண்டன் விளையாட்டில் 2-0 (21-2, 21-3) என்ற கேம் கணக்கில் மங்கோலிய வீராங்கனையான கன்பத்தாரை வீழ்த்தி இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றிப்பெற்றார்.
ஆசிய விளையாட்டு போட்டி- பதக்க பட்டியல் விவரம்:
சீனா- 76 தங்கம் உள்பட 140 பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. தொடர்ந்து, கொரியா- 70 பதக்கங்களுடன் 2வது இடத்திலும், ஜப்பான் 66 பதக்கங்களுடன் 3வது இடத்திலும், உஸ்பெகிஸ்தான் 28 பதக்கங்களுடன் 4வது இடத்திலும், தாய்லாந்து 17 பதக்கங்களுடன் 5வது இடத்திலும், ஹாங்காங்- சீனா 27 பதக்கங்களுடன் 6வது இடத்திலும் உள்ளன.
ஆசிய விளையாட்டு போட்டி 2023ல், 6வது நாளாக இன்று வரை நடந்த போட்டிகளில் 5 தங்கம் உள்பட 22 பதக்கங்களை வென்று இந்தியா 7வது இடத்தில் உள்ளது.
பேட்மிண்டனில் ரவுண்ட் ஆப் 16 போட்டி 1-ல் இந்தியா- மங்கோலியா இடையேயான போட்டி தொடங்கியது. இதில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து விளையாடி வருகிறார்.