விளையாட்டு
LIVE

ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்

Published On 2023-09-23 06:42 IST   |   Update On 2023-10-07 16:38:00 IST
2023-10-03 01:36 GMT

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அரை சதமடித்து அசத்தினார்.

2023-10-03 01:32 GMT

கபடி போட்டியின் முதல் சுற்றில் இந்திய அணி வங்காளதேசத்தை 55-18 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வீழ்த்தியது.

2023-10-03 01:30 GMT

800 மீட்டர் ஓட்டத்தின் இறுதிச்சுற்றுக்கு இந்தியாவின் சந்தா மற்றும் ஹர்மிலன் பெயின் ஆகியோர் முன்னேறினர்.

2023-10-03 01:21 GMT

நேபாளத்துக்கு எதிரான காலிறுதியில் இந்திய அணி 3.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் குவித்துள்ளது.

2023-10-03 01:16 GMT

வில்வித்தைப் போட்டியின் காம்பவுண்டு தனிநபர் காலிறுதியில் இந்திய வீராங்கனை அதிதி கோபிசந்த் சுவாமி பிலிப்பைன்ஸ் வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

2023-10-03 00:55 GMT

வில்வித்தைப் போட்டியின் காலிறுதியில் இந்திய வீராங்கனை ஜோதி வெண்ணாம் கஜகஸ்தான் வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

2023-10-03 00:38 GMT

ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியின் காலிறுதியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

2023-10-02 15:28 GMT

ஆசிய விளையாட்டில் இந்தியா இதுவரை 60 பதக்கங்களை வென்றுள்ளது. பதக்க பட்டியலில் இந்தியா தொடர்ந்து நான்காவது இடத்திலேயே உள்ளது. 

2023-10-02 14:13 GMT

ஏழு பதக்கங்கள்:

ஆசிய விளையாட்டில் இந்தியா இன்று மட்டும் மூன்று வெள்ளி மற்றும் நான்கு வெண்கலம் என மொத்தம் ஏழு பதக்கங்களை வென்றுள்ளது. 

2023-10-02 13:42 GMT

ஆண்கள் டெகாத்லான்:

இந்தியாவின் தேஜாஸ்வின் சங்கர் 4260 புள்ளிகளுடன் முன்னணியில் உள்ளார். இவர் இரண்டாம் இடத்தில் உள்ள வீரரை விட 250 புள்ளிகள் அதிகமாக பெற்று இருக்கிறார். 

Tags:    

Similar News