ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
இந்தியாவுக்கு வெள்ளி:
கலப்பு தொடர் ஓட்டத்தில் இருந்து இலங்கை அணி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்.
4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம்.
நீளம் தாண்டுதலில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம். இந்தியாவின் ஆன்சி சோஜன் இரண்டாவது இடம் பிடித்து அசத்தல்.
தடகளத்தில் பெண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் இந்தியாவின் பருல் சவுத்ரி வெள்ளிப் பதக்கமும், பிரீதி லம்பா வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தினர்.
வில்வித்தையில் ஆண்கள் தனிநபர் ரிகர்வ் பிரிவில் இந்தியாவின் அதானு தாஸ் மற்றும் தீரஜ் பொம்மதேவரா ஆகியோர் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர். நாளை காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
பெண்கள் கூடைப்பந்து பிரிவு காலிறுதியில் இந்திய அணி வட கொரியாவிடம் 57-96 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.
கபடி போட்டியில் இந்திய பெண்கள் அணியும், சீன தைபே அணியும் மோதின. இதில் இரு அணிகளும் தலா 34 புள்ளிகள் பெற்று சமனிலையில் முடிந்தது.
ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வங்காளதேசத்துடன் மோதியது. இதில் தொடக்கம் முதல் இந்திய வீரர்கள் அதிரடியாக ஆடினர். இதனால் முதல் பாதி முடிவில் இந்தியா 6-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியிலும் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இறுதியில், இந்திய அணி 12-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி 21-11, 21-16 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
ஆண்கள் ஹாக்கியில் இந்திய அணி ஆட்டத்தில் வங்காளதேசத்துடன் மோதி வருகிறது. இதில் முதல் பாதி முடிவில் இந்தியா 6-0 என முன்னிலை வகிக்கிறது.