ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அனாகத் சிங், அபய் சிங் ஜோடி, ஹாங்காங் ஜோடியை 2-0 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியின் 2வது காலிறுதியில் டாஸ் வென்ற ஹாங்காங் முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து பாகிஸ்தான் முதலில் களமிறங்குகிறது.
ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பல்லிகல், ஹரிந்தர் பால் சிங் ஜோடி, ஜப்பான் ஜோடியை 2-0 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
வில்வித்தையில் ஆண்கள் தனிநபர் காம்பவுண்டு பிரிவில் இந்திய வீரர் பிரவீன் ஓஜஸ், 150-146 என்ற புள்ளிக் கணக்கில் கொரிய வீரரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
ஜெயிஸ்வால் அதிரடி சதத்தால் நேபாளத்துக்கு எதிரான காலிறுதியில் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
வில்வித்தைப் போட்டியின் காம்பவுண்டு ஆண்கள் தனிநபர் பிரிவில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா, கொரிய வீரரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து 21-10, 21-15 என்ற புள்ளிக் கணக்கில் சீன தைபே வீராங்கனையை விழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
பெண்கள் ஹாக்கியில் இந்திய அணி ஹாங்காங்கை 13-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றதுடன், அரையிறுதிக்கும் முன்னேறியது.
வில்வித்தைப் போட்டியின் பெண்கள் காம்பவுண்டு தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா வெண்ணம், சக வீராங்கனை அதிதியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
கேனோ ஆண்கள் டபுள் 1000 மீட்டர் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன் சிங், சுனில் சிங் சலாம் ஆகியோர் 3ம் இடம் பிடித்து வெண்கலம் வென்றனர்.
உஸ்பெகிஸ்தான் தங்கம், கஜகஸ்தான் வெள்ளியும் வென்றனர்.
இந்திய அணி இதுவரை 13 தங்கம், 24 வெள்ளி, 24 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களைப் பெற்றுள்ளது.