விளையாட்டு
LIVE

ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்

Published On 2023-09-23 06:42 IST   |   Update On 2023-10-07 16:38:00 IST
2023-10-03 03:05 GMT

பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் 2வது சுற்றில் 21-9, 21-12 என்ற கணக்கில் மங்கோலிய வீரரை வீழ்த்தினார்.

2023-10-03 02:59 GMT

வில்வித்தைப் போட்டியின் ஆண்கள் காம்பவுண்டு தனிநபர் பிரிவில் இந்திய வீரர் பிரவீன் ஓஜஸ் அரையிறுதிக்கு முன்னேறினார்.

2023-10-03 02:39 GMT

வில்வித்தைப் போட்டியின் காம்பவுண்டு தனிநபர் பிரிவில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா அரையிறுதிக்கு முன்னேறினார்.

2023-10-03 02:37 GMT

நேபாளத்துக்கு எதிரான காலிறுதியில் இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்துள்ளது.

2023-10-03 02:15 GMT

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி 49 பந்தில் சதமடித்து அசத்தினார்.

2023-10-03 02:03 GMT

இந்திய அணியின் ஜிதேஷ் சர்மா 5 ரன்னில் அவுட்டானார்.

2023-10-03 01:58 GMT

இந்திய அணியின் திலக் வர்மா 2 ரன்னில் அவுட்டானார்.

2023-10-03 01:52 GMT

தடகளத்தில் 4*400 ரிலே ரேசில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப்போட்டி நாளை நடைபெறுகிறது.

2023-10-03 01:47 GMT

இந்திய கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் 25 ரன்னில் அவுட்டானார்.

2023-10-03 01:43 GMT

நேபாளத்துக்கு எதிரான காலிறுதியில் இந்திய அணி 9.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 100 ரன்கள் குவித்துள்ளது.

Tags:    

Similar News