விளையாட்டு

ஜோதி சுரேகா வெண்ணாம்

உலக வில்வித்தை - தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை ஜோதி தங்கம் வென்றார்

Published On 2023-04-22 13:27 GMT   |   Update On 2023-04-22 13:27 GMT
  • துருக்கியில் உலக கோப்பை வில் வித்தை ஸ்டேஜ் 1 சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
  • தனிநபர் பெண்களுக்கான இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை தங்கம் வென்றார்.

அன்டல்யா:

துருக்கியில் உலக கோப்பை வில் வித்தை ஸ்டேஜ் 1 சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் தனிநபர் பெண்களுக்கான இறுதிப்போட்டி இன்று நடந்தது.

இதில் இந்தியாவின் ஜோதி சுரேகா வெண்ணாம், தரவரிசையில் 3ம் இடத்தில் உள்ள் கொலம்பியாவின் சாரா லோபசை 149-146 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்று அசத்தினார்.

ஏற்கனவே இந்தியாவின் ஜோதி சுரேகா அரையிறுதியில் பிரிட்டன் வீராங்கனையை வீழ்த்தினார்.

Tags:    

Similar News