என் மலர்
நீங்கள் தேடியது "ஜோதி சுரேகா வெண்ணாம்"
- இந்திய வீராங்கனை வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
- இது அவரது முதல் உலகக் கோப்பை பதக்கமாகும்.
வில்வித்தை உலகக் கோப்பை போட்டி சீனாவில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் 8 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில் இந்திய வீராங்கனையான ஜோதி சுரேகா வென்னம் கலந்து கொண்டார். பரபரப்பான இந்த போட்டியில் பிரிட்டன் வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இது அவரது முதல் உலகக் கோப்பை பதக்கமாகும். இதன் மூலம் உலகக் கோப்பையில் பதக்கம் வென்ற முதல் நபராகவும் அவர் வரலாறு படைத்துள்ளார்.
ஜோதி இதற்கு முன் 2022 (Tlaxcala) மற்றும் 2023 (Hermosillo) இறுதிப் போட்டிகளில் பங்கேற்றிருந்தார். ஆனால் முதல் சுற்றிலேயே வெளியேறினார் என்பது குறிப்பிடதக்கது.
- துருக்கியில் உலக கோப்பை வில் வித்தை ஸ்டேஜ் 1 சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
- தனிநபர் பெண்களுக்கான இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை தங்கம் வென்றார்.
அன்டல்யா:
துருக்கியில் உலக கோப்பை வில் வித்தை ஸ்டேஜ் 1 சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் தனிநபர் பெண்களுக்கான இறுதிப்போட்டி இன்று நடந்தது.
இதில் இந்தியாவின் ஜோதி சுரேகா வெண்ணாம், தரவரிசையில் 3ம் இடத்தில் உள்ள் கொலம்பியாவின் சாரா லோபசை 149-146 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்று அசத்தினார்.
ஏற்கனவே இந்தியாவின் ஜோதி சுரேகா அரையிறுதியில் பிரிட்டன் வீராங்கனையை வீழ்த்தினார்.






