விளையாட்டு

லைவ் அப்டேட்ஸ்: பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா- 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Published On 2023-10-14 08:04 GMT   |   Update On 2023-10-14 16:27 GMT
  • உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
  • அகமதாபாத்தில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டி இன்று நடைபெறுகிறது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இந்நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டி இன்று மதியம் நடைபெறுகிறது.

இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்குகிறது.

2023-10-14 14:01 GMT

அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 86 (63) ரன்னில் அவுட்.



2023-10-14 13:50 GMT

ஸ்ரேயாஷ் அய்யர் - ரோகித் சர்மா 50 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்து விளையாடி வருகின்றனர்.

2023-10-14 13:31 GMT

இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.

2023-10-14 13:30 GMT

4 சிக்சர்களுடன் அரை சதத்தை பதிவு செய்தார் ரோகித் சர்மா.

2023-10-14 13:11 GMT

10 ஓவர் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

2023-10-14 13:10 GMT

ஹசன் அலி பந்து வீச்சில் விராட் கோலி ஆட்டமிழந்தார்.

2023-10-14 12:56 GMT

ரோகித் - விராட் கோலி அதிரடியால் இந்திய அணி 6.4 ஓவரில் 50 ரன்களை கடந்தது.



2023-10-14 12:46 GMT

4 பவுண்டரிகளை விளாசிய சுப்மன் கில் 16 ரன்னில் அப்ரிடி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.



2023-10-14 12:44 GMT

இந்திய அணி முதல் 2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 22 ரன்கள் எடுத்துள்ளது.

2023-10-14 11:59 GMT

பாகிஸ்தானின் கடைசி விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார். பாகிஸ்தான் அணி 42.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Tags:    

Similar News