விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டி - வில்வித்தையில் தங்கம், வெண்கலம் வென்றது இந்தியா

Published On 2023-10-07 01:26 GMT   |   Update On 2023-10-07 01:31 GMT
  • வில்வித்தை பெண்கள் ஒற்றையர் காம்பவுண்டு பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் பெற்றது.
  • ஏற்கனவே வில்வித்தையில் இந்தியாவின் அதிதி கோபிசந்த் சுவாமி வெண்கலம் வென்றார்.

பீஜிங்:

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

நேற்று 1 தங்கம், 2 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களை வென்றது.

இந்நிலையில், இன்று காலை வில்வித்தை காம்பவுண்டு தனிநபர் பிரிவில் இந்தியாவின் ஜோதி சுரேகா வெண்ணாம் கொரிய வீராங்கனையை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.

காம்பவுண்டு தனிநபர் பிரிவு, பெண்கள் காம்பவுண்டு மற்றும் காம்பவுண்டு கலப்பு அணி ஆகியவற்றில் ஜோதி சுரேகா வெண்ணாம் தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, வில்வித்தை காம்பவுண்டு தனிநபர் பிரிவில் இந்தியாவின் அதிதி கோபிசந்த் சுவாமி வெண்கலப் பதக்கம் வென்றார்.

இந்திய அணி இதுவரை 23 தங்கம், 34 வெள்ளி, 40 வெண்கலம் என மொத்தம் 97 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.

Tags:    

Similar News