விளையாட்டு

இந்தியா-வங்காளதேசம் மோதல் 3-வது நாள் ஆட்டமும் மழையால் தாமதம்

Published On 2024-09-29 10:30 IST   |   Update On 2024-09-29 10:30:00 IST
  • 3-வது நாள் ஆட்டமும் மழையால் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
  • ஆட்டத்தின் வெளிப்புற பகுதி ஈரப்பதமாக இருந்தது.

கான்பூர்:

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் தொடரில் சென்னையில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 280 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது.

முதலில் விளையாடிய வங்காளதேசம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன் எடுத்து இருந்தது. மொமினுல் ஹக் 40 ரன்னும், முஷ்பிகுர் ரகீம் 6 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

மழையால் ஆட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. 90 ஓவர்களில் 35 ஓவர் மட்டுமே வீச முடிந்தது. நேற்றைய 2-வது நாள் போட்டியும் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.


இன்றைய 3-வது நாள் ஆட்டமும் மழையால் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

ஆட்டத்தின் வெளிப்புற பகுதி ஈரப்பதமாக இருந்தது. போட்டியை திட்டமிட்டபடி காலை 9.30 மணிக்கு தொடங்க முடியவில்லை. நடுவர்கள் ஆடுகளத்தை பாவையிட்ட பிறகு போட்டியை தொடங்க இயலாது என்று தெரிவித்தார்.

காலை 10 மணிக்கு நடுவர்கள் மீண்டும் மைதானத்தை பார்வையிட்டனர். அப்போது இதே நிலையே நீடித்தது. போட்டியை தொடங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. 

Tags:    

Similar News