கால்பந்து

மெஸ்சியின் கேரள சுற்றுப்பயணம் தற்காலிகமாக ரத்து - ரசிகர்கள் ஏமாற்றம்

Published On 2025-10-25 14:22 IST   |   Update On 2025-10-25 14:22:00 IST
  • மெஸ்சி தலைமையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்தது.
  • மெஸ்சி நவம்பர் 17-ந் தேதி கொச்சிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்பவர் லியோனல் மெஸ்சி. இவர் அர்ஜென்டினா அணியின் கேப்டனாக திகழ்கிறார். இவரது தலைமையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்தது.

மெஸ்சியின் அர்ஜென்டினா-ஆஸ்திரேலியா இடையே காட்சி கால்பந்து போட்டி நவம்பர் 17-ந் தேதி கொச்சியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், அர்ஜென்டினா கால்பந்து அணி மற்றும் அதன் நட்சத்திர வீரர் மெஸ்சியின் கேரள சுற்றுப்பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த அறிவிப்பை போட்டியை ஸ்பான்சர் செய்யும் தனியார் நிறுவனம் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News