விளையாட்டு

உலக கோப்பை மகளிர் செஸ் காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஹம்பி வெற்றி

Published On 2025-07-20 14:53 IST   |   Update On 2025-07-20 14:53:00 IST
  • இந்தியாவின் முன்னணி வீராங்கனையான கொனேரு ஹம்பி சீனாவை சேர்ந்த சாங்கை எதிர் கொண்டார்.
  • இன்று 2-வது போட்டியை ‘டிரா’ செய்தாலே ஹம்பி அரையிறுதிக்கு தகுதி பெறுவார்.

பீடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. இதன் கால் இறுதி ஆட் டங்கள் நேற்று தொடங்கியது. முதல் முறையாக 4 இந்திய வீராங்கனைகள் கால்இறுதிக்கு தகுதி பெற்று இருந்தனர்.

இந்தியாவின் முன்னணி வீராங்கனையான கொனேரு ஹம்பி கால் இறுதியில் சீனாவை சேர்ந்த சாங்கை எதிர் கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஹம்பி தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக செயல்பட்டார். 53-வது நகர்த்தலின் போது யுக்சின் தோல்வியை ஒப்புக் கொண்டார். இதனால் ஹம்பி வெற்றி பெற்றார். அவர் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளார். இன்று 2-வது போட்டியை 'டிரா' செய்தாலே ஹம்பி அரையிறுதிக்கு தகுதி பெறுவார்.

சென்னை கிராண்ட்மாஸ் டரான வைஷாலி சீன வீராங்கனையும், முன்னாள் சாம்பியனுமான டான் ஜோங்கியை சந்தித்தார்.இந்த ஆட்டம் 72-வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.

மற்றொரு கால்இறுதியில் இந்திய வீராங்கனைகள் திவ்யா-ஹரிகா மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய திவ்யா, தொடக்கத்தில் முந்தினார். பின்னர் 31-வது நகர்த்தலில் போட்டி 'டிரா' ஆனது. இருவரும் 0.5-0.5 என சம நிலையில் இருந்தனர்.

Tags:    

Similar News