கிரிக்கெட் (Cricket)
முத்தரப்பு டி20 தொடர்: நியூசிலாந்துக்கு 121 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே
- வெஸ்லி மாதேவரே 32 பந்தில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்ரி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஜிம்பாப்வேயில் முத்தரப்பு டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஜிம்பாப்வே, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஜிம்பாப்வே மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்களாக வெஸ்லி மாதேவரே- பிரையன் பென்னட் களமிறங்கினர். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். பிரையன் பென்னட் 20 பந்தில் 21 எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக வெஸ்லி மாதேவரே 32 பந்தில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்ரி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.