பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் ஜெய்ஸ்வால்.. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சாதனை
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 173 ரன்கள் குவித்தார்.
- இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 318 ரன்கள் குவித்தது.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 318 ரன்கள் குவித்தது. ஜெய்ஸ்வால் 173 ரன்களுடனும் கில் 20 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இந்த போட்டியில் 150 ரன்களுக்கு மேல் குவித்ததன் மூலம் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் சாதனை பட்டியலில் ஜெய்ஸ்வால் இணைந்துள்ளார்.
அதன்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் 23 வயதிற்குள் அதிகமுறை 150+ ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் டான் பிராட்மேனுக்கு அடுத்த வீரராக ஜெய்ஸ்வால் இணைந்துள்ளார்.
8 முறை 150+ ரன்கள் அடித்து முதலிடத்தில் பிராட்மேன் நீடிக்கும் நிலையில், 2-வது வீரராக 5 முறை அடித்து ஜெய்ஸ்வால் நீடிக்கிறார்.
இந்த பட்டியலில் இந்தியாவின் ஜாம்பவான் சச்சின் 4 சதங்களுடன் 5-வது இடத்தில் உள்ளார்.