கிரிக்கெட் (Cricket)

வெளியேறும் சஞ்சு, பராக்.. ராஜஸ்தான் அணியின் கேப்டன் போட்டியில் ஜெய்ஸ்வால் vs ஜூரல்

Published On 2025-11-10 17:16 IST   |   Update On 2025-11-10 17:16:00 IST
  • ராஜஸ்தான் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • சிஎஸ்கே அணிக்கு விக்கெட் கீப்பர் பேட்டர் தேவை என்பதால் சாம்சனை வாங்க அதிக அளவில் முயற்சி செய்து வருகின்றனர்.

புதுடெல்லி:

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலமானது டிசம்பர் வாரம் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் பத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து விடுவிக்கப்போகும் வீரர்களின் பட்டியலையும், தக்க வைக்கப்போகும் வீரர்களின் பட்டியலையும் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் ஏற்கனவே கெடு விதித்திருந்தது.

இதன் காரணமாக தற்போது அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கும் 10 அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலையும், வெளியேற்ற விரும்பும் வீரர்களின் பட்டியலையும் தயார் செய்து வருகிறது. அதோடு அதற்கு முன்னதாக வீரர்கள் டிரேடிங் முறையிலும் அணிமாற்றம் செய்து கொள்ளலாம் என்பதனால் சில நட்சத்திர வீரர்கள் அதன் வாயிலாக அணிமாற்றம் செய்வார்கள் என்றும் பேசப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ராஜஸ்தான் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை அணியில் எம் எஸ் தோனிக்கு வயதாகி விட்டதால் அவர் 20 ஓவரும் கீப்பிங் செய்வார் என்பது சந்தேகம்தான். இதனால் கண்டிப்பாக சிஎஸ்கே அணிக்கு விக்கெட் கீப்பர் பேட்டர் தேவை என்பதால் சஞ்சு சாம்சனை டிரேட் முறையில் எடுக்க அதிக அளவில் முயற்சி செய்து வருகின்றனர்.

சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேறினால் அந்த அணியின் கேப்டனாக யார் செயல்படுவார் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த சீசனில் சாம்சன் இல்லாத போட்டிகளில் ரியான் பராக் கேப்டனாக செயல்பட்டார். அதனால் அவர்தான் கேப்டன் என சில தகவல்கள் வந்த நிலையில் அவரையும் ராஜஸ்தான் அணி விடுவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் இவர்களுக்கு அடுத்தபடியாக ஜெய்ஸ்வால் மற்றும் ஜூரல் உள்ளனர். இவர்களில் ஒருவர் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக வருவதற்கு அதிகப்படியான வாய்ப்பு இருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

Tags:    

Similar News