கிரிக்கெட் (Cricket)
கையில் உலக கோப்பை டாட்டூ: ஸ்மிருதி மந்தனா செய்த நெகிழ்ச்சி செயல்
- சமீபத்தில் நடந்த மகளிர் உலக கோப்பையை இந்தியா வென்றது.
- ஸ்மிருதி மந்தனாவுக்கு நவம்பர் 20-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மும்பையை சேர்ந்த 29 வயதாகும் இடது கை பேட்டரான ஸ்மிருதி மந்தனா இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையாகவும், துணை கேப்டனாகவும் இருந்து வருகிறார். இவருக்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
சமீபத்தில் நடந்த மகளிர் உலக கோப்பை இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில் உலக கோப்பையை தனது கையில் டாட்டூவாக ஸ்மிருதி மந்தனா போட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கிடையே ஸ்மிருதி மந்தனாவும், இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இருவருக்கும் நவம்பர் 20-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.