கிரிக்கெட் (Cricket)
null

லெஜண்ட்ஸ் லீக்: பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா மறுப்பு- இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பாகிஸ்தான்

Published On 2025-07-30 20:50 IST   |   Update On 2025-07-30 21:54:00 IST
  • லீக் சுற்றின் முடிவில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
  • முதல் அரையிறுதிப்போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் - பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் நாளை மோத இருந்தது.

லீட்ஸ்:

2025 உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜண்ட்ஸ் லீக் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் முடிவில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

முதல் அரையிறுதிப்போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் - பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகளும் 2-வது அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதவுள்ளனர்.

இந்நிலையில் முதல் அரையிறுதியில் இந்தியா- பாகிஸ்தான் மோதவிருந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட இந்திய வீரர்கள் மறுத்துள்ளனர். இதனால் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி அரையிறுதியில் விளையாடமலே இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

பஹல்காம் தாக்குதல் காரணமாக, ஜுலை 20-ம் தேதி நடக்கவிருந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் விளையாட ஷிகர் தவான், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான், யூசுப் பதான் உள்ளிட்ட வீரர்கள் விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து லீக் போட்டி ரத்து செய்யப்பட்டது.

Tags:    

Similar News