கிரிக்கெட் (Cricket)

தவறான முடிவு எடுக்கும் நடுவர்களுக்கும் அபராதம் விதிக்க வேண்டும்: வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஆதங்கம்..!

Published On 2025-06-28 14:57 IST   |   Update On 2025-06-28 14:57:00 IST
  • முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை 180 ரன்னில் சுருட்டியது வெஸ்ட் இண்டீஸ்.
  • நடுவரின் தவறான முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 190 ரன்னில் ஆல்அவுட் ஆக வேண்டிய நிலை ஏற்பட்டதாக ஆதங்கம்.

வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பிரிட்ஜ்டவுனில நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 180 ரன்னில் சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 190 ரன்கள் மட்டுமே அடித்தது. அந்த அணி ஒரு கட்டத்தில் 72 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. 6ஆவது விக்கெட்டுக்கு கேப்டன் சேஸ் உடன் ஷாய் ஹோப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது.

சேஸ் 44 ரன்கள் எடுத்திருக்கும்போது, கம்மின்ஸ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். ஹோப் வெப்ஸ்டர் வீசிய பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் 190 ரன்னில் சுருண்டது.

இந்த இரண்டு விக்கெட்டும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எல்பிடபிள்யூக்கு சேஸ் ரிவ்யூ கேட்டார். அல்ட்ராஎட்ஜ் தொழில்நுட்பத்தில் பந்து லேசாக உரசியதற்கான விசிபில் ஸ்பைக் ஏற்படும். இருந்தபோதிலும் 3ஆவது நடுவர் விக்கெட்டு கொடுத்துவிடுவார்.

சேஸ் கேட்சை விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி பிடிக்கும்போது, பந்து தரையில் படுவது நன்றாக தெரியும். அப்படி இருந்தும் 3ஆவது நடுவர் விக்கெட் கொடுத்து விடுவார்கள்.

இந்த நிலையில்தான் மைதானத்தில் வீரர்கள் தவறு செய்தால், விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படுகிறது. அதேபோல் மைதானம் சமமான நிலையில் இருக்க நடுவர்கள் தவறு செய்தாலும், அவர்களுக்கும் அபராதம் விதிக்க வேண்டும் என வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோஸ்டன் சேஸ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Tags:    

Similar News