கிரிக்கெட் (Cricket)

100/3... அடுத்த 67 ரன்களில் வெஸ்ட் இண்டீஸ் ஆல் அவுட்.. நியூசிலாந்து பவுலர் மிரட்டல் பந்து வீச்சு

Published On 2025-12-03 11:10 IST   |   Update On 2025-12-03 11:10:00 IST
  • நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 231 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
  • நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

கிறிஸ்ட்சர்ச்:

நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய நியூசிலாந்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 231 ரன் எடுத்து இருந்தது.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. நியூசிலாந்து அணி மேலும் ரன் எதுவும் எடுக்காமல் 231 ரன்னில் ஆல் அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்டஇண்டீஸ் அணி 10 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து சாய் ஹோப் மற்றும் சந்தர்பால் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தது. 56 ரன்கள் எடுத்த நிலையில் சாய் ஹோப் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த கேப்டன் ரோஸ்டன் சேஸ் மற்றும் ஜஸ்டின் கிரீவ்ஸ் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.

அதனை தொடர்ந்து சந்தர்பால் 52 ரன்னிலும் அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க வெஸ்ட் இண்டீஸ் அணி 167 ரன்களில் ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

Tags:    

Similar News