null
லெஜண்ட் உலக சாம்பியன்ஷிப்: இங்கிலாந்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான் சாம்பியன்ஸ்..!
- பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி 160 ரன்கள் சேர்த்தது.
- இங்கிலாந்து அணியால் 155 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
லெஜண்ட் உலக சாம்பியன்ஷிப் டி20 கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நேற்று தொடங்கியது. இதில் இங்கிலாந்து சாம்பியன்ஸ்- இந்தியா சாம்பியன்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய பாகிஸ்தான் சாம்பியன்ஸ் 160 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் ஹபீஸ் அதிகபட்சமாக 34 பந்தில் 54 ரன்கள் விளாசினார்.
பின்னர் 161 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து சாம்பியன்ஸ் களம் இறங்கியது. வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த போதிலும், 20 ஓவர் முடிவில் 155 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து தொடக்க வீரர் பில் முஸ்டார்ட் 58 ரன்கள் அடித்ார். இயன் பெல் 35 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை.
இனறு இரண்டு ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றன. முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ்- தென்ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணிகளும், 2ஆவது போட்டியில் இங்கிலாந்து சாம்பியன்ஸ்- ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணிகளும் மோதுகின்றன.