டி20 அணி தலைமை பயிற்சியாளராக வி.வி.எஸ். லட்சுமண்: அப்படியானால் கம்பீர்?...
- டெஸ்ட் அணி அணி ஆஸ்திரேலியா புறப்படுகிறது. கம்பீர் அணியுடன் செல்ல இருக்கிறார்.
- அந்த நேரத்தில் டி20 தொடர் நடத்தப்படுவதால் லட்சுமண் தலைமை பயிற்சியாளராக செயல்படுவார்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் உள்ளார். தேசிய அகாடமியின் தலைமை ஆலோசகராக வி.வி.எஸ். லஷ்மண் உள்ளார். இந்திய அணி நவம்பர் மாதம் தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான டி20 இந்திய அணி சூர்யகுமார் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய டி20 அணிக்கு தலைமை பயிற்சியாளராக வி.வி.எஸ். லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏனென்றால், இந்திய டி20 கிரிக்கெட் அணி தென்ஆப்பரிக்காவில் நவம்பர் 8, 10, 13 மற்றும் 15-ந்தேதிகளில் விளையாடுகிறது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான இந்திய அணி 10-11-ந்தேதிகளில் புறப்படுகிறது.
கவுதம் கம்பீர் இந்திய டெஸ்ட் அணியுடன் ஆஸ்திரேலியா புறப்பட வேண்டியிருப்பதால், டி20 அணியுடன் செல்ல முடியாது. இதனால் லட்சுமண் நியமிக்கப்பட்டள்ளார்.
லஷ்மண் உடன் சாய்ராஜ் பகதுலே, ஹிஷ்கேஷ் கனித்கர், சுபாதீப் கோஷ் போன்ற கோச்சிங் ஸ்டாஃப்களும் செல்ல இருக்கிறார்கள்.