கிரிக்கெட் (Cricket)
U19 ஒருநாள் கிரிக்கெட்: சூர்யவன்ஷியின் அதிரடியால் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி
- ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக விளையாடிய வைபவ் சூரியவன்ஷி U19 இந்திய அணியில் இடம்பிடித்தார்.
- ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் விளையாடி வருகிறது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள U19 இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 பலநாள் போட்டிகளில் விளையாடுகிறது. ஜூன் 27 முதல் ஜூலை 7 வரை 5வது ஒருநாள் போட்டிகள் நடைபெறுகிறது.
அவ்வகையில் நேற்று U19 இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 42.2 ஓவரில் 174 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து, 175 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 24 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
அதிரடியாக விளையாடிய வைபவ் சூரியவன்ஷி 19 பந்துகளில் 48 ரன்கள் குவித்தார்.