கிரிக்கெட் (Cricket)

TNPL: நெல்லையை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அபார வெற்றி

Published On 2025-06-09 23:54 IST   |   Update On 2025-06-09 23:54:00 IST
  • 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது.
  • கேப்டன் அருண் கார்த்திக் 41 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார்.

9-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) கிரிக்கெட் தொடரின் ஆறாவது லீக் ஆட்டத்தில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நெல்லை ராயல் கிங்ஸ் அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று (ஜூன் 9, 2025) நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற நெல்லை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.

முதலில் பேட் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் கே. ஆஷிக் அரைசதம் அடித்து 54 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பாபா அபராஜித் 41 ரன்களும், ஸ்வப்னில் சிங் 14 பந்துகளில் அதிரடியாக 45 ரன்களும் எடுத்தனர். 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெல்லை ராயல் கிங்ஸ் அணி, சேப்பாக் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

கேப்டன் அருண் கார்த்திக் 41 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். முகமது அட்னான் கான் 27 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்தார். இருப்பினும், இறுதியில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது நெல்லை ராயல் கிங்ஸ். இந்த வெற்றியின் மூலம் சேப்பாக் புள்ளிப் பட்டியலில் முன்னேறி உள்ளது.  

Tags:    

Similar News