டிஎன்பிஎல் 2025: நெல்லை ராயல் கிங்ஸ்க்கு 213 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
- பாபா அபராஜித் 29 பந்தில் 41 ரன்களும், கே. ஆஷிக் 38 பந்தில் 54 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.
- ஸ்வப்னில் சிங் 14 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சருடன் 45 ரன்கள் விளாசினார்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 6ஆவது போட்டி கோவையில் நடைபெற்று வருகிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பந்து வீச்சை தெர்வு செய்தது.
அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கே. ஆஷிக், மோஹித் ஹரிகரன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஹரிகரன் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து ஆஷிக் உடன் கேப்டன் பாபா அபராஜித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
பாபா அபராஜித் 29 பந்தில் 41 ரன்களும், கே. ஆஷிக் 38 பந்தில் 54 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த விஜய் சங்கர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த என். ஜெகதீசன் 13 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
17 ஓவர் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் அடித்திருந்தது. 18ஆவது ஓவரை உதய் குமார் வீசினார். இந்த ஓவரில் ஸ்வப்னில் சிங் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரி அடிக்க சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணிக்கு 25 ரன்கள் கிடைத்தது. இதனால் 181 ரன்கள் குவித்தது.
19ஆவது ஓவரை சோனு யாதவ் வீசினார். இந்த ஓவரில் 15 ரன்கள் அடித்தது. இதனால் 196 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரை வெள்ளியப்பன் யூதீஸ்வரன் வீசினார். இந்த ஓவரில் 2 சிக்ஸ் விளாசிய ஸ்வப்னில் சிங் 4ஆவது பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 14 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சருடன் 45 ரன்கள் விளாசினார். ஆவது பந்தில் அபிஷேன் தன்வர் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் ரன் அவுட் உடன் ஒரு ரன் கிடைத்தது. மொத்தமாக 16 ரன்கள் கிடைத்தது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவரில் 212 ரன்கள் குவித்துள்ளது. விஜய் சங்கர் 24 பந்தில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ்:-
என். ஜெகதீசன், பாபா அபராஜித், அபிஷேக் தன்வர், எஸ் தினேஷ் ராஜ், சுனில் கிருஷண்னா, மோஹித் ஹரிகரன், விஜய் சங்கர், ஸ்வப்னில் சிங், பிரேம் குமார், எம். சிலம்பரசன், கே. ஆஷிக்.
நெல்லை ராயல் கிங்ஸ் அணி:-
அருண் கார்த்திக், அஜிதேஷ் குருசாமி, என்.எஸ். ஹரிஷ், ரிதிக் ஈஸ்வரன், சோனு யாதவ், பி.எஸ். நிர்மல் குமார், முகமது அட்னாம் கான், சச்சின் ரதி, வள்ளியப்பன் யூதீஸ்வரன், இம்மானுவேல் செரியன், எம். உதய் குமார்.