VIDEO: கேமரா மேனை கட்டி பிடித்து மன்னிப்பு கேட்ட ஹர்திக் பாண்டியா
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
- இந்த போட்டியில் ஆட்டநாயகனாக ஹர்திக் பாண்ட்யா தேர்வு செய்யப்பட்டார்.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3-1 என்ற கணக்கில் இந்தியா தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
முன்னதாக இந்த போட்டியின் போது ஹர்திக் பாண்ட்யா சிக்சர் அடித்த பந்து, பவுண்டரி லைனில் இருந்த கேமரா மேன் மீது பட்டது. இதனையடுத்து அவர் கையில் ஐஸ்பேக் ஒத்தரம் கொடுக்கப்பட்டது. இதனை அறிந்த ஹர்திக் பாண்ட்யா அவரை கட்டியணைத்து காயம் எப்படி இருக்கிறது என்பதை விசாரித்தார். அதற்கு கேமராமேன் அதிர்ஷ்டவசமாக கையில் பட்டது. கொஞ்சம் மேலே பட்டிருந்தால் அவ்வளவு தான் என சிரித்தப்படி கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.