கிரிக்கெட் (Cricket)

TNPL 2025: அவுட் கொடுத்த பெண் நடுவர்... கெஞ்சிய அஸ்வின் - வைரல் வீடியோ

Published On 2025-06-08 21:20 IST   |   Update On 2025-06-08 21:20:00 IST
  • சாய் கிஷோர் பந்துவீச்சில் LBW முறையில் அஸ்வின் ஆட்டமிழந்தார்.
  • அஸ்வின் தனது கிளவுஸை கழட்டி வெளியே வீசினார்.

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 4 ஆவது போட்டி கோவையில் நடைபெற்று வருகிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய திண்டுக்கல் அணி திருப்பூர் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இறுதியாக 16 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 93 ரன்களுக்கு திண்டுக்கல் அணி ஆல் அவுட்டானது.

இப்போட்டியில் சிறப்பான ஆடிய அஸ்வின், சாய் கிஷோர் பந்துவீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்தார். ரீபிளேவில் பந்து லெக் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆனது தெளிவாக தெரிந்தது. ஆனால் ஏற்கனேவே 2 ரெவியூக்களையும் இழந்ததால் அவரால் அந்த விக்கெட்டுக்கு ரெவியூ எடுக்க முடியவில்லை.

இதனால் பெண் நடுவரிடம் முறையிட்ட அஸ்வின், பின்னர் கடுப்பாகி தனது பேட்டை கொண்டு தனது தொடையை அடித்தார். பின்னர் தனது கிளவுஸை கழட்டி வெளியே வீசினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

Tags:    

Similar News