வலைப்பயிற்சியின் போது இளம் ஆஸ்திரேலிய வீரர் மரணம்- சோகத்தில் ரசிகர்கள்
- சக பவுலர்கள் வீசிய பவுன்சர் பந்துகளை ஹெல்மெட் அணிந்து கொண்டு பேட்டிங் செய்து பயிற்சி எடுத்துள்ளார்.
- ஒரு பந்து அவருடைய கழுத்துப் பகுதியில் பலமாக பட்டுள்ளது.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவை சேர்ந்த 17 வயது இளம் வீரர் பென் ஆஸ்டின் பேட்டிங் பயிற்சியின்போது கழுத்தில் பந்துதாக்கி மரணம் அடைந்துள்ளார்.
மெல்போர்னில் கிளப் அணிக்காக விளையாடும் ஆஸ்டின் கடந்த செவ்வாய்க்கிழமை பெர்ன்ட்ரீ கல்லியில் வலை பயிற்சி எடுத்துள்ளார். அப்போது சக பவுலர்கள் வீசிய பவுன்சர் பந்துகளை ஹெல்மெட் அணிந்து கொண்டு பேட்டிங் செய்து பயிற்சி எடுத்துள்ளார். ஆனால் கழுத்து பகுதியை பாதுகாக்கும் அம்சம் அதில் இல்லை.
இந்நிலையில் துரதிர்ஷ்டவசமாக ஒரு பந்து அவருடைய கழுத்துப் பகுதியில் பலமாக பட்டுள்ளது. அதனால் சுருண்டு விழுந்த அவரை உடனடியாக அருகில் இருக்கும் மோனஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். அங்கே அவருக்கு 2 நாட்கள் தீவிர சிகிச்சை கொடுத்தப்பட்டது.
ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார். இதனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. இந்த செய்தி வெளியாகி கிரிக்கெட் உலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.