கிரிக்கெட் (Cricket)

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிங்க் ஜெர்சியில் களமிறங்கும் இந்திய மகளிர் அணி

Published On 2025-09-20 10:57 IST   |   Update On 2025-09-20 10:57:00 IST
  • இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று நடக்கிறது.
  • இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி பிங்க் ஜெர்சி அணிந்து விளையாட உள்ளது.

புதுடெல்லி:

ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முல்லாப்பூரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் இந்தியா 102 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது.

இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி பிங்க் ஜெர்சி அணிந்து விளையாட உள்ளது. மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பிங்க் நிற ஜெர்சி அணிந்து இந்திய மகளிர் அணி விளையாட உள்ளது. இது தொடர்பாக வீடியோ ஒன்றை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து இந்திய வீராங்கனை தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

Tags:    

Similar News