கிரிக்கெட் (Cricket)
ஜூனியர் ஆசிய கோப்பை: 14 சிக்சர் விளாசி சாதனை படைத்த சூர்யவன்ஷி
- சூர்யவன்ஷி 95 பந்தில் 171 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
- இதில் 14 சிக்சர்களும் அடங்கும்.
துபாய்:
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டது. இதில் பீகாரைச் சேர்ந்த 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடினார். அவர் 95 பந்தில் 171 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 14 சிக்சர்களும் அடங்கும்.
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் 32 பந்தில் 100-ஐ கடந்து டி20 போட்டிகளில் அதிவேகமாக சதம் விளாசிய இந்தியர்களில் 3-வது இடத்தைப் பகிர்ந்து கொண்டார்.
இந்நிலையில், ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்சில் (14 சிக்சர்) அதிக சிக்சர் அடித்தவர் என்ற புதிய சாதனையை சூர்யவன்ஷி படைத்துள்ளார்.
ஏற்கனவே, ஐ.பி.எல். மற்றும் சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்டில் குறைந்த வயதில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.