கிரிக்கெட் (Cricket)
அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்: மும்பை மக்களுக்கு ரோகித் சர்மா அட்வைஸ்
- மும்பை மற்றும் புறநகரில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
- சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
மும்பை:
மகாராஷ்டிரா தலைநகர் மும்பை மற்றும் புறநகரில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. இன்று காலையிலும் மழை வெளுத்து வாங்கியது.
கொட்டித் தீர்த்த கனமழையால் மும்பை நகரமே வெள்ளக்காடாக மாறி உள்ளது.
சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
இந்நிலையில், இந்திய அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் ரோகித் சர்மா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அனைவரும் பத்திரமாக, பாதுகாப்பாக இருங்கள் என பதிவிட்டுள்ளார்.