கிரிக்கெட் (Cricket)

மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம்- ஸ்மிருதி மந்தனா சாதனை

Published On 2025-10-23 18:11 IST   |   Update On 2025-10-23 18:11:00 IST
  • நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் மந்தனா 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
  • மகளிர் ஒருநாள் போட்டியில் அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் மந்தனா 2-வது இடத்திற்கு முன்னேறினார்.

மகளிர் ஒருநாள் உலக கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து- இந்தியா அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி இந்திய அணி தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா - பிரதிகா ராவல் களமிறங்கினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் அடித்து அசத்தினார்.

95 பந்தில் 109 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்மிருதி மந்தனா ஆட்டமிழந்தார். மந்தனா சதம் அடித்ததன் மூலம் மகளிர் ஒருநாள் போட்டியில் அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் 2-வது இடத்திற்கு மந்தனா (14) முன்னேறினார். ஆஸ்திரேலியாவின் மெக் லேனிங் 15 சதத்துடன் முதலிடத்தில் தொடர்கிறார்.

மேலும் இந்த ஆண்டில் தனது ஐந்தாவது சதத்தை மந்தனா அடித்துள்ளார். இதன் மூலம் ஒரு ஆண்டில் அதிக சதங்கள் அடித்த தென் ஆப்பிரிக்க வீராங்கனை டாஸ்மின் பிரிட்ஸின் சாதனையை மந்தனா சமன் செய்துள்ளார்.

Tags:    

Similar News