கிரிக்கெட் (Cricket)

இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்: இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா வங்கதேசம்?

Published On 2025-06-27 18:02 IST   |   Update On 2025-06-27 18:02:00 IST
  • வங்கதேசம் முதல் இன்னிங்சில் 247 ரன்களில் சுருண்டது.
  • இலங்கை 458 ரன்கள் குவித்தது.

இலங்கை- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கொழும்பில் (எஸ்எஸ்சி) கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. இலங்கையின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 247 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை 458 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் பதுன் நிசாங்கா 158 ரன்கள் விளாசினார். குசால் மெண்டிஸ் 84 ரன்களும், தினேஷ் சண்டிமல் 93 ரன்களும் சேர்த்தனர்.

பின்னர் 211 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்கதேசம் 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. 2ஆவது இன்னிங்சிலும் இலங்கை வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர். இதனால் இன்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்துள்ளது.

லிட்டன் தாஸ் 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இன்னும் 96 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 4 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. லிட்டன் தாஸ் தாக்குப்பிடித்து விளையாடினால் வங்கதேசம் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க வாய்ப்புள்ளது. இல்லையென்றால் இலங்கை இன்னிங்ஸ் வெற்றியை உறுதி செய்யும்.

Tags:    

Similar News