கிரிக்கெட் (Cricket)

ரஞ்சி டிராபியில் சதம்.. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த சுப்மன் கில்

Published On 2025-01-25 15:27 IST   |   Update On 2025-01-25 15:27:00 IST
  • பஞ்சாப் அணியின் கேப்டன் சுப்மன் கில் முதல் இன்னிங்சில் 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.
  • 2-வது இன்னிங்சில் சுப்மன் கில் சதமடித்தும் பஞ்சாப் அணி இன்னிங்ஸ் தோல்வியடைந்தது.

ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி 23-ந் தேதி தொடங்கிய ஒரு போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான பஞ்சாப் அணியும் மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடகா அணியும் மோதின.

இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, மோசமான ஆட்டத்தின் மூலம் 55 ரன்னில் சுருண்டது. அதிகம் எதிர்பார்த்த நட்சத்திர வீரரான சுப்மன் கில் 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

இதனையடுத்து களமிறங்கிய கர்நாடகா அணி ஸ்மரண் ரவிச்சந்திரனின் இரட்டை (203) சதத்தால் 475 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இதனால் கர்நாடக அணி 420 ரன்கள் முன்னிலை பெற்றது.

கடினமாக சூழலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் கேப்டன் சுப்மன் கில்லை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 102 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இறுதியில் பஞ்சாப் அணி 213 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் கர்நாடக அணி இன்னிங்ஸ் மற்றும் 207 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 4 ரன்னில் வெளியேறி நிலையில் சுப்மன் கில் மீது பல்வேறு விமர்சங்கள் எழுந்தது. இதனையடுத்து 2-வது இன்னிங்சில் சதம் விளாசியதன் மூலம் தன் மீதான விமர்சங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். 

Tags:    

Similar News