டி20 அணியில் மீண்டும் ஷ்ரேயாஸ் அய்யர்: ஆசிய கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பு எனத் தகவல்..!
- ஷ்ரேயாஸ் அய்யர் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார்.
- ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம பிடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்.
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் அய்யர். இவரது தலைமையிலான பஞ்சாப் அணி இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணியுடன் மோதி, சாம்பியன் வாய்ப்பை இழந்தது. இந்தத் தொடரில் 17 போட்டிகளில் 604 ரன்கள் விளாசினார்.
இவர் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் இடம்பிடித்து விளையாடி வருகிறார். டெஸ்ட் மற்றும் டி20 போட்டிக்காக இந்திய அணியில் இவர் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில் நல்ல ஃபார்மில் உள்ள அவரை ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துலீப் டிராபிக்கான மேற்கு மண்டல அணியின் கேப்டனாக இவர் பெயர் அறிவிக்கப்படவில்லை. ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சேர்க்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதால் அவர் கேப்டனாக நியமிக்கபடவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் செப்டம்பர் 28ஆம் தேதி வரை நடைபெற பெறுகிறது. இந்தியா- பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 14ஆம் தேதி பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.
ஷ்ரேயாஸ் அய்யர் கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடினார். அதன்பின் ஷ்ரேயாஸ் அய்யர் இந்திய அணிக்காக டி20 போட்டியில் விளையாடியது கிடையாது.