கட்டாயத்தால் மட்டும்தான் போய்ட்டாரு... RR அணிக்கு ஜடேஜா சென்றது குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்
- சஞ்சு சாம்சனை சென்னை அணி டிரேட் முறையில் வாங்கியது
- அதற்கு பதிலாக ஜடேஜா, சாம் கரனை ராஜஸ்தான் அணிக்கு சிஎஸ்கே கொடுத்தது.
ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த ஏலத்திற்கு முன்பு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும் பட்டியலை பிசிசிஐக்கு ஐபிஎல் அணிகள் வழங்கி விட்டன.
அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்த சஞ்சு சாம்சனை சென்னை அணி டிரேட் முறையில் வாங்கியது.
அதன்படி சென்னை அணியில் விளையாடிய ஜடேஜா, சாம் கரனை ராஜஸ்தான் அணிக்கு கொடுத்து ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்ட சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி வாங்கியுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.
சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணியில் எடுப்பதற்காக இத்தனை வருடங்கள் விளையாடிய ஜடேஜவை சிஎஸ்கே அணி விட்டுக்கொடுப்பதா என ரசிகர்கள் கொந்தளித்து வந்தனர். மேலும் கடைசியாக ஜடேஜா ஐபிஎல் கோப்பையை பெற்றுக் கொடுத்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு சோக பாடல் பாடி வந்தனர்.
இதனால் ஜடேஜா ராஜஸ்தான் அணிக்கு சென்றது குறித்து சிஎஸ்கே நிர்வாகம் விளக்கமளித்தது. அதில் இரு நிர்வாகம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியே இந்த டிரேட் முறை நடந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் ராஜஸ்தான் அணி நிர்வாகத்திடம் தன்னை ராஜஸ்தான் அணியில் எடுத்துக்கொள்ளுமாறு ஜடேஜா கேட்டுக் கொண்டதாக ராஜஸ்தான் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது சென்னை ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
எதனால் இந்த முடிவு இருக்கலாம் என்பது குறித்து ரசிகர்கள் ஒவ்வொரு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். தோனி இந்த சீசனுடம் வெளியேறுவதால் இந்த முடிவை எடுத்திருக்காலம் என ஒரு சிலரும், என்னதான் சிஎஸ்கே அணியை வெற்றி பெற வைத்தாலும் நமக்கான மதிப்பு இங்கு கிடைக்கவில்லை அதனால் தான் சென்றிருக்கலாம் என சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.