கிரிக்கெட் (Cricket)

கேரள கிரிக்கெட் லீக்கில் அதிரடி சதம் விளாசிய சஞ்சு சாம்சன்!

Published On 2025-08-25 07:22 IST   |   Update On 2025-08-25 07:22:00 IST
  • சஞ்சு சாம்சனை கொச்சி ப்ளூ டைகர்ஸ் 26.8 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியது.
  • கேரள கிரிக்கெட் லீக்கில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தொகைக்கு சஞ்சு சாம்சன் ஏலம் எடுக்கப்பட்டார்.

ஐபிஎல் (இந்தியன் பிரீமியர் லீக்) டி20 தொடர் பிரபலமான நிலையில் ஒவ்வொரு மாநில கிரிக்கெட் சங்கங்களும் டி20 கிரிக்கெட் லீக்கை தொடங்க ஆரம்பித்தன.

அவ்வகையில் கேரளா கிரிக்கெட் லீக் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று கொல்லம் - கொச்சி அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்லம் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விஷ்ணு வினோத் 94 ரன்களும் சச்சின் பேபி 91 ரன்களும் அடித்தனர்.

இதனையடுத்து 237 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொச்சி அணி கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து திரில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 51 பந்துகளில் 121 ரன்கள் குவித்து அவுட்டனார். சதம் விளாசிய சஞ்சு சாம்சன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Tags:    

Similar News