கிரிக்கெட் (Cricket)

இனி விளையாட மாட்டேன்.. RR அணியில் இருந்து விடுவிக்க சஞ்சு சாம்சன் கோரிக்கை?

Published On 2025-08-07 20:04 IST   |   Update On 2025-08-07 20:04:00 IST
  • ராஜஸ்தான் அணியின் நிர்வாகத்திற்கும், சஞ்சு சாம்சன் தரப்புக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது.
  • ராஜஸ்தான் அணிக்கு தொடர்ந்து விளையாட சஞ்சு சாம்சன் விரும்பவில்லை என்று சஞ்சு குடும்பத்தினர் கூறியுள்ளதாக தெரிகிறது.

ராஜஸ்தான் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் செயல்பட்டு வந்தார். கடந்த சீசனில் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக விலகிய போது, ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமனம் செய்யப்பட்டார். இந்த முடிவுக்கு பின்னணியில் ரியான் பராக்கின் உறவினர் ரஞ்சித் பர்தாகூர் இருந்தார்.

ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களில் ரஞ்சித் பர்தாகூரும் ஒருவர். இதனால் சஞ்சு சாம்சனை ஓரம்கட்டும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டதாக சர்ச்சைகள் எழுந்தன.

ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு டிரேட் செய்யப்பட உள்ளதாகப் பேச்சுகள் எழுந்தன. தோனியின் இடத்தில் சஞ்சு சாம்சனை வைத்து நிரப்ப சிஎஸ்கே முயற்சிப்பதாகவும் சொல்லப்பட்டது.

இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பாக சஞ்சு சாம்சனை டிரேட் செய்யும் திட்டத்திலோ, மெகா ஏலத்திற்கு முன் ரிலீஸ் செய்யும் திட்டத்திலோ ராஜஸ்தான் அணி நிர்வாகம் இல்லை என்று அந்த அணி அதிகாரி ஒருவர் கூறி இருந்தார்.

இந்நிலையில் ராஜஸ்தான் அணி நிர்வாகத்திடம் தன்னை விடுவிக்கும் படி சஞ்சு சாம்சன் கேட்டுக் கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. ராஜஸ்தான் அணியின் நிர்வாகத்திற்கும், சஞ்சு சாம்சன் தரப்புக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது.

இதனால் வேறு அணிக்கு டிரேட் செய்ய வேண்டும் அல்லது ஏலத்திற்கு முன்பாக ரிலீஸ் செய்ய வேண்டும் என்று சஞ்சு சாம்சன் கேட்டிருக்கிறார். அதேபோல் சஞ்சு சாம்சன் குடும்பத்தினரும், ராஜஸ்தான் அணிக்கு தொடர்ந்து விளையாட சஞ்சு சாம்சன் விரும்பவில்லை என்று கூறியதாகக் கூறப்படுகிறது. இதனால் சிஎஸ்கே அணி அவரை எடுக்க முயற்சி எடுக்கும் என தெரிகிறது.

Tags:    

Similar News