பாகிஸ்தானின் 3 வடிவிலான கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாகும் சல்மான் ஆகா
- முகமது ரிஸ்வான் ஒயிட்பால் அணி கேப்டனாக இருந்து வருகிறார்.
- ஷான் மசூத் டெஸ்ட் அணி கேப்டனாக உள்ளார்.
பாகிஸ்தான் ஒயிட்பால் கிரிக்கெட் அணி கேப்டனாக ரிஸ்வான் இருந்து வருகிறார். பாகிஸ்தான் ஜிம்பாப்வே சென்று டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் சல்மான் ஆகா கேப்டன்ஷிப் செய்யும் விதம் புதிய பயிற்சியாளர் மைக் ஹசன் மற்றும் தேர்வுக்குழு அதிகாரிகளை வெகுவாக ஈர்த்துள்ளது.
இதனால் சல்மான் ஆகா டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என 3 வடிவிலான கிரிக்கெட் அணி கேப்டனாக நியமிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.
முகமது ரிஸ்வான் தலைமையில் பாகிஸ்தான அணி நியூசிலாந்து சென்று ஒருநாள் தொடரை 3-0 எனத் தோற்றிருந்தது. அவரது கேப்டன்ஷிப் விமர்சனத்திற்கு உள்ளானது. அத்துடன் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தொடக்க சுற்றோடு வெளியேறியது.
ஷான் மசூத் டெஸ்ட் அணி கேப்டனாக உள்ளார். இவரது தலைமையில் பாகிஸ்தான் 12 போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. வங்கதேச அணிக்கெதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை 0-2 என இழந்திருந்தது. இதனால் இருவர் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அவ்வளவாக ஈர்ப்பு இல்லை.
இந்த நிலையில்தான் சல்மான் ஆகாவின் கேப்டன்ஷிப், அவரின் தெளிவு, தந்திரோபாய திறமை ஆகியவை தேர்வாளர்களை ஈர்த்துள்ளது.