கிரிக்கெட் (Cricket)

பிரேம் குமார் அசத்தல் பந்து வீச்சு: சேப்பாக் அணிக்கு 161 ரன்கள் இலக்கு

Published On 2025-06-19 21:03 IST   |   Update On 2025-06-19 21:03:00 IST
  • சேலம் அணியின் கேப்டன் அபிஷேக் 47 ரன்னில் அவுட் ஆனார்.
  • சேப்பாக் அணி தரப்பில் பிரேம் குமார் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

சேலம்:

9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதன்படி சேலம் அணியின் தொடக்க வீரர்களாக ஹரி நிசாந்த் மற்றும் கேப்டன் அபிஷேக் களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். 31 ரன் எடுத்த நிலையில் நிசாந்த் ஆட்டமிழந்தார்.

அடுத்த வந்த ராஜகோபால் 7, கவின் 1, ராஜேந்திரன் 3, என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் 47 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில் சன்னி சந்த் மற்றும் முகமது ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சன்னி சந்து 19 பந்தில் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். முகமது 11 பந்தில் 28 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனால் சேலம் அணி 20 ஓவர் முடிவில் 154 ரன்கள் எடுத்தது. சேப்பாக் அணி தரப்பில் பிரேம் குமார் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 47 ரன்னில் ஆட்டமிழந்தார்.

Tags:    

Similar News