கிரிக்கெட் (Cricket)

இங்கிலாந்து தொடரில் அசத்துவார்.. சாய் சுதர்சனை புகழ்ந்த மும்பை பயிற்சியாளர் ஜெயவர்தனே

Published On 2025-05-31 20:17 IST   |   Update On 2025-05-31 20:17:00 IST
  • இடது கை ஆட்டக்காரரான அவரிடம் எல்லாவிதமான ஷாட்டுகளும் இருக்கின்றன.
  • கவுண்டி கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி உள்ளதால் அவருக்கு அந்த அனுபவம் கை கொடுக்கும்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய எலிமினேட்டர் சுற்றில் மும்பை- குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் குஜராத் முதலில் தடுமாறிய போது தமிழக வீரர்களான சாய் சுதர்சன் - வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்டு வெற்றிக்காக போராடினார். இருந்து குஜராத் அணி தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

இருந்தாலும் நடப்பு தொடரில் 15 போட்டிகளில் விளையாடி 54 ரன்கள் சராசரியுடன் 759 ரன்கள் குவித்துள்ளார். அதில் ஆறு அரைசதங்களும், ஒரு சதமும் அடங்கும். தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில்

சாய் சுதர்சன் மிகச்சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இடது கை ஆட்டக்காரரான அவரிடம் எல்லா விதமான ஷாட்டுகளும் இருக்கின்றன. மேலும் டெக்னிக்கலாகவும் அவர் மிகவும் வலுவாக இருக்கிறார். எனவே தான் சொல்கிறேன் நிச்சயம் சவாலான இங்கிலாந்து மைதானங்களில் கூட அவரிடம் உள்ள ஸ்கில்களை வைத்து அவரால் நிச்சயம் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்.

ஏற்கனவே இங்கிலாந்தில் அவர் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி உள்ளதால் அவருக்கு அந்த அனுபவம் கை கொடுக்கும். சாய் சுதர்சன் போன்ற திறமையான வீரர் நிச்சயம் இங்கிலாந்து தொடரில் அசத்துவார்.

என ஜெயவர்த்தனே கூறியுள்ளார்.

Tags:    

Similar News