கிரிக்கெட் (Cricket)

விஜய் ஹசாரே தொடரில் சதத்தில் சாதனை படைத்த ருதுராஜ் கெய்க்வாட்

Published On 2026-01-08 16:01 IST   |   Update On 2026-01-08 16:01:00 IST
  • ஏ பிரிவில் நடந்த லீக் போட்டியில் மகாராஷ்டிரா, கோவா அணிகள் மோதின
  • ருதுராஜ் கெய்க்வாட் 131 பந்துகளில் 134 ரன்கள் அடித்து கடைசி வரைக்கும் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

விஜய் ஹசாரே டிராபி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஏ பிரிவில் நடந்த லீக் போட்டியில் மகாராஷ்டிரா, கோவா அணிகள் மோதின. டாஸ் வென்ற மகாராஷ்டிரா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய மகாராஷ்டிரா அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 131 பந்துகளில் 134 ரன்கள் அடித்து கடைசி வரைக்கும் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன்மூலம் விஜய் ஹசாரே தொடரில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள அங்கித் பாவ்னே சாதனையை ருதுராஜ் கெய்க்வாட் (15) சமன் செய்தார்

ருதுராஜ், அங்கித் ஆகியோர் 15 சதங்கள் அடித்துள்ள நிலையில், அதற்கு அடுத்த இடங்களில் உள்ள படிக்கல், மயங்க் அகர்வால் ஆகியோர் 13 சதங்கள் அடித்துள்ளனர்.

Tags:    

Similar News