கிரிக்கெட் (Cricket)
சேவாக்கின் வாழ்நாள் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா
- ரோகித் சர்மா 121 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சதம் விளாசிய ரோகித் சர்மா பல சாதனைகளை படைத்தார்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3ஆவது ஒருநாள் போட்டி இன்று சிட்னியில் நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா 121 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
இந்த போட்டியில் சதம் விளாசிய ரோகித் சர்மா பல சாதனைகளை படைத்தார். அதில், சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் விளாசிய தொடக்க வீரர் என்ற சேவாக்கின் சாதனையை ரோகித் முறியடித்தார்.
15758 ரன்கள் அடித்து முதலிடத்தில் இருந்த விரேந்தர் சேவாக் சாதனையை 15,787 ரன்கள் அடித்து ரோகித் முறியடித்து அசத்தியுள்ளார். ரோகித், சேவாக்கிற்கு அடுத்தபடியாக 15,335 ரன்கள் அடித்து சச்சின் 3 ஆம் இடத்தில உள்ளார்.