காலில் எலும்பு முறிவு: ரிஷப் பண்ட்க்கு பதிலாக தமிழக வீரர் இந்திய அணியில் சேர்ப்பு
- கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்து ரிஷப் பண்ட்டின் காலை நேராக தாக்கியதால் காயம் ஏற்பட்டது.
- காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையிலும் மீண்டும் வந்து விளையாடிய பண்ட் அரைசதம் அடித்தார்.
மான் செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரா போர்ட் மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
இப்போட்டியில் கிறிஸ்வோக்ஸ் வீசிய யார்க்கர் பந்தில் ரிஷப் பண்ட் காயம் அடைந்தார். அவரது வலது கால் பெரு விரலில் பந்து தாக்கியது. ரத்தம் கசிந்தது. காலில் பயங்கரமான வீக்கம் ஏற் பட்டது. வலியால் அவர் துடித்தார். உடனடியாக அணியின் உடல் இயக்க நிபுணர் வந்து முதலுதவி அளித்தார்.
ஆனாலும் வலி குறையாததால் ஆம்புலன்ஸ் பெயர டப்பட்ட கோல்ப் வண்டி மூலம் மைதானத்தில் இருந்து வெளியே அழைத்து செல்லப்பட்டார்.அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அப்போது அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது.
காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையிலும் இந்திய அணிக்காக மீண்டும் வந்து விளையாடிய பண்ட் அரைசதம் அடித்து அசத்தினார் .
இந்நிலையில், காலில் ஏற்பட்ட எலும்பு முறிவால் இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகியுள்ளார் அவருக்கு பதிலாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெகதீசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.