ENG Vs IND: டெஸ்டில் 150 கேட்ச்- ரிஷப் பண்ட் புதிய சாதனை
- இந்த போட்டியில் ரிஷப் பண்ட் 2 கேட்ச்களை பிடித்துள்ளார்.
- போப் மற்றும் பென் ஸ்டோக்ஸ் கேட்ச்சை ரிஷப் பண்ட் பிடித்தார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவரில் 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 49 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து விளையாடி வரும் இங்கிலாந்து அணி மதிய உணவு இடைவேளை வரை 5 விக்கெட்டுகளை இழந்து 327 ரன்கள் எடுத்துள்ளது.
முன்னதாக இந்த போட்டியில் ரிஷப் பண்ட் 2 கேட்ச்களை பிடித்துள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் 150 கேட்ச்களை பிடித்து ரிஷப் பண்ட் சாதனை படைத்துள்ளார்.
ஜடேஜா பந்து வீச்சில் ஹாரி ப்ரூக்குக்கு ரிஷப் பண்ட் கேட்ச் மிஸ் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.