கிரிக்கெட் (Cricket)

சமாஜ்வாதி எம்.பி.யுடன் காதலில் விழுந்தது எப்படி? ரிங்கு சிங் கூறிய காதல் கதை

Published On 2025-08-23 12:52 IST   |   Update On 2025-08-23 12:52:00 IST
  • எங்களின் காதல் உருவானது 2022 கொரோனா காலக்கட்டத்தில் தான்.
  • இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப்ரியா சரோஜின் புகைப்படத்தை லைக் செய்தேன்.

மும்பை:

இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரிங்கு சிங் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் இளம் எம்பியான ப்ரியா சரோஜ் இருவருக்கும் நவம்பர் 18-ம் தேதி திருமணம் நடக்கவுள்ளது.

இந்த நிலையில் சமாஜ்வாதி எம்பி ப்ரியா சரோஜ் உடன் காதல் உருவானது எப்படி என்று நட்சத்திர வீரர் ரிங்கு சிங் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

எங்களின் காதல் உருவானது 2022 கொரோனா காலக்கட்டத்தில் தான். அப்போது ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக மும்பையில் முகாமிட்டிருந்தேன். அப்போது இன்ஸ்டாகிராமில் என்னுடைய ரசிகர் பேஜ் ஒன்றில் ப்ரியா வின் புகைப்படம் பதிவிடப்பட்டு வாக்கு கோரப்பட்டது.

ப்ரியா சரோஜின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவரின் சகோதரி எடுத்து பதிவிட்டு வந்தார். அவர் என்னுடைய ரசிகரின் பேஜ் ஒன்றில் புகைப்படத்தை பதிவிடுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த புகைப்படத்தை பார்த்த உடன் மிகவும் பிடித்துப் போய்விட்டது.

உடனடியாக அவரின் புகைப்படத்தை லைக் செய்துவிட்டேன். மெசேஜ் அனுப்பலாமா என்று யோசித்த போது, அது சரியாக இருக்காது என்று நிறுத்திவிட்டேன். அதன்பின் சில நாட்களுக்கு பின் ப்ரியா சரோஜ் என்னுடைய இன்ஸ்டா புகைப்படங்களை லைக் செய்திருந்தார்.

அதன்பின் நானே நேரடியாக மெசேஜ் அனுப்பினேன். அப்படிதான் எல்லாமே தொடங்கியது. ஓரிரு வாரங்களில் நாங்கள் தொடர்ச்சியாக பேச தொடங்கிவிட்டோம். போட்டி தொடங்குவதற்கு முன், போட்டிக்கு பின் என்று பேசிக் கொண்டே இருந்தோம். அதன்பின் எனக்குள் காதல் ஏற்பட்டது.

என்று ரிங்கு சிங் கூறினார்.

Tags:    

Similar News