கிரிக்கெட் (Cricket)

இப்போ ஓடு பார்க்கலாம்: 99 ரன்னில் ஜோ ரூட்டை கிண்டலடித்த ஜடேஜா

Published On 2025-07-11 03:55 IST   |   Update On 2025-07-11 03:55:00 IST
  • முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 251 ரன்கள் எடுத்துள்ளது.
  • அந்த அணியின் ஜோ ரூட் 99 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

லண்டன்:

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கி நிதானமாக ஆடியது.

பென் டக்கெட் 23 ரன்னிலும், ஜாக் கிராலே 18 ரன்னிலும் அவுட்டாகினர். ஒல்லி போப் 44 ரன்னிலும், ஹாரி புரூக் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் ஆடிய ஜோ ரூட் அரை சதம் கடந்தார்.

முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 83 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 99 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 39 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இந்தியா சார்பில் நிதிஷ்குமார் 2 விக்கெட்டும், பும்ரா, ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்நிலையில், முதல் நாள் ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் 39 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். ஜோ ரூட் 99 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவர் ஒரு ரன் ஓட முயற்சி செய்தார். அப்போது பந்தை பிடித்த ஜடேஜா அங்கிருந்து ஜோ ரூட்டை பார்த்து, எங்கே ஓடிப் பாரேன் என சைகையில் செய்தார்.

அதைப் பார்த்து ஜோ ரூட் சிரித்தார். உடனே ஜடேஜா பந்தை கீழே வைத்து, இப்போதாவது ஓடு என கூறினார். ஜோ ரூட் ஓடாததால் பந்தை எடுத்து ஜடேஜா மீண்டும் எறிந்தார். இதை அடுத்து மைதானத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.

Tags:    

Similar News