சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறும் அஸ்வின்?
- அஸ்வின் 2008 முதல் 2015 வரை சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர்.
- 2025 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அவரை 9.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
ரவிச்சந்திரன் அஸ்வின் 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்காக விளையாடினார். 2025 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அவரை 9.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது. அஸ்வின் 2008 முதல் 2015 வரை சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர், பின்னர் பல அணிகளுக்காக விளையாடி, பின்னர் 2025-ல் மீண்டும் சிஎஸ்கே-வுக்கு திரும்பினார்.
இந்நிலையில் 2026 ஐபிஎல் தொடருக்கு முன்பாக சிஎஸ்கே அணியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு அஸ்வின் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் ராஜஸ்தான் அணியில் இருந்த தன்னை விடுவிக்குமாறு சஞ்சு சாம்சன் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ள நிலையில் சிஎஸ்கே அணியில் இருந்து அஸ்வினும் வெளியேற உள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அஸ்வின் ஐபிஎல் வரலாற்றில் 212 போட்டிகளில் 180 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.